ராஜ்மா பிரியாணி
Share
ராஜ்மா பிரியாணி
ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி?
தேவையானவை:
பாசுமதி அரிசி - ஒரு கப்,
ராஜ்மா, நறுக்கிய வெங்காயத்தாள் - தலா கால் கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க:
பட்டை - ஒரு துண்டு,
பெரிய ஏலக்காய் - பாதி அளவு,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4.
Method
ராஜ்மா பிரியாணி:
கடாயில் எண்ணெய் விட்டு, வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் பொடிக்கவும்.
முதல் நாள் இரவே ராஜ்மாவை ஊற வைக்கவும்.
குக்கரில் கால் கப் தண்ணீர் விட்டு, ஊற வைத்த ராஜ்மாவைச் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் நெய் விட்டு... நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு நன்கு வதக்கவும்.
ஊற வைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) அதில் போட்டு, நன்கு வறுத்து... குக்கரில் உள்ள ராஜ்மாவுடன் சேர்க்கவும்.
பொடித்த மசாலாத்தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கலந்து மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
இப்போது சுவையான ராஜ்மா பிரியாணி ரெடி.
பரிமாறுவதற்கு முன் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
Hits: 5652, Rating : ( 5 ) by 1 User(s).